இன்ஸ்டாகிராம் செயலிக்கு தடை விதித்துள்ள துருக்கியே!! 02/08/2024 / #sgnewsinfo, #worldnews இன்ஸ்டாகிராம் செயலிக்கு தடை விதித்துள்ள துருக்கியே!! துருக்கியே நாட்டில் இன்ஸ்டாகிராம் தடை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அந்நாட்டு தேசிய தொடர்பு அமைச்சகம் விளக்கம் அளிக்காமல் அதனை அறிவித்துள்ளது.அதோடு X தளத்தில் துருக்கியே உள்ள மக்கள் பலரால் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் அப்டேட் செய்யவோ பயன்படுத்த முடியவில்லை என்று பகிர்ந்தனர்.இன்ஸ்டாகிராம் அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!! சமீபத்தில் துருக்கிய உயர் அதிகாரி ஒருவர் இன்ஸ்டாகிராம் தளத்தின் தணிக்கை குறித்து புகார் செய்தார்.மக்கள் மறைந்த ஹாமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகளை பதிவிட விரும்புவதாக கூறினார் .அதை நிறுவனம் தடுத்ததாக புகார் கூறினார் .துருக்கியே அதிபர் மற்றும் ஹமாஸ் தலைவர் ஹனியே ஆகிய இருவரும் மிக நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!!