பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!!
பிரிட்டனின் சௌத்போர்ட் நகரில் திங்கட்கிழமை அன்று மூன்று சிறுமிகளை கத்தியால் குத்தி கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் 10 பேரைக் கொலைச் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த சிறுமிகளுக்கு 6,7,9 வயது.
சிறுமிகளுக்காக கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கும்,காவல்துறைக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.
கொலைச் சம்பவமானது சமயம் தொடர்பான பயங்கரவாத தாக்குதல் என வதந்தி பரவி வருவதால் இந்த கலவரம் ஏற்பட்டது.