சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை?
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
கனமழையால் நிலச்சரிவும்,வெள்ளமும் ஏற்பட்டதில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் ,பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இருந்த தடயமே இல்லாத அளவிற்கு இருக்கிறது.
இந்த இயற்கை பேரழிவால் பலியானோரின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கி விட்டது.
மேலும் நுற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்றே தெரியவில்லை.
அவ்வப்போது மழை பெய்வதாலும் மீட்பு பணியில் சிக்கல் ஏற்படுகிறது.
பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.