என்ன!! திருமணத்திற்காக புதிய பட்டப்படிப்பு அறிமுகமா?
சீனாவில் அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் புதிய பட்டப்படிப்பு அறிமுகம் காண உள்ளது.இந்த பட்டப்படிப்பு திருமணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிறப்பு விகிதத்தையும்,திருமணங்களையும் அதிகரிப்பதற்காக சீனா அரசாங்கம் புது புது முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.
இந்த புதிய பட்டப்படிப்பு பெய்ஜிங்கில் உள்ள சீன சிவில் விவகாரங்கள் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும்.
அதனை சிவில் விவகாரங்களுக்கான அமைச்சகம் நிர்வகிக்கும்.
அந்த பட்டப்படிப்பின் முதல் தொகுதியில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 70 பேர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சுமார் 45 சதவீதம் வகுப்பில் கற்றுத் தரப்படும் .மீதம் நடைமுறை பயிற்சியாக கற்றுத் தரப்படும்.
இந்த கல்வி திட்டம் மாணவர்களுக்கு திருமணங்களுக்கு தேவையான திறன்களை கற்றுக் கொடுக்கும்.
மேலும் திருமணத்தை எவ்வாறு திட்டமிடலாம்,குடும்ப ஆலோசனை உள்ளிட்டவைகள் குறித்தும் பயிற்சிஅளிக்கப்படும் .