சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!!

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!!

சிங்கப்பூரில் இந்த ஆண்டு(2024) பிப்ரவரி 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டாம் கட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய சட்டம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்(இன்று) அமலுக்கு வந்துள்ளது.

கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதற்கட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன.

மொத்தம் 7 திருத்தங்கள் இன்று(ஆகஸ்ட் 1) அமலுக்கு வருகிறது.

இன்று நடைமுறைக்கு வரும் 7 திருத்தங்கள் :

▪️தேவைப்பட்டால் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லமால் சோதனை நடத்தலாம்.

▪️நிதி நிறுவனங்களிடம் விசாரணைக்காக வாடிக்கையாளர்களின் விவரங்களை அளிக்கும்படி உத்தரவிடலாம்.

▪️காவல்துறையிடம் இருந்து தப்பி செல்லும் நபர்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு,குடிவரவு, சோதனைச் சவாடிகள் ஆணையம், சிங்கப்பூர் சிறைச்சேவைகள் போன்றவைகள் கைது செய்ய அதிகாரம் அளிக்கப்படும்.

▪️சொத்துகளைப் பறிமுதல் செய்ய காவல்துறை அல்லாத அமைப்புக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

▪️ஜாமீனில் வெளிவர முடியாத சிறிய குற்றங்களைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் சொந்த ஜாமீனில் வெளிவர அனுமதிக்கப்படலம்.

▪️வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் ரகசியமான தகவல்களைப் பாதுகாக்கும் அமைப்பு மேலும் விரிவுப்படுத்தப்படும்.

▪️பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையில் மேம்படுத்தப்படும்.