ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் புதிய நடைமுறை!!
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் குடிநுழைவு முகைப்பைக் கடந்து செல்வதற்கு இனி பாஸ்போர்ட் தேவையில்லை.இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சோதனை முறையில் அமலுக்கு வரும்.
எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதையும்,அதே சமயத்தில் பயணிகளுக்கு வசதியான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே அதன் நோக்கம்.
இந்த புதிய நடைமுறை அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும்.
இதனை குடிநுழைவு,சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் முக மற்றும் அங்க அடையாள செயல்முறையை மூலம் குடிநுழைவு சோதனைகளை முடிக்கலாம் என குடிநுழைவு,சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
இந்த புதிய வசதி சிங்கப்பூரின் அனைத்து முனையங்களிலும் வரும் செப்டம்பர் இறுதிக்குள் நீடிக்கப்படும்.
மேலும் மரினா பே கப்பல் நிலையத்திலும் பாஸ்போர்ட் இன்றி குடிநுழைவு சோதனைமுறையை டிசம்பர் மாதம் அமல்படுத்தப்படும்.