தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!!

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!!

தேர்தல் துறை அரசியல் நன்கொடை சான்றிதழ்கள் மற்றும் சிறுபான்மை சமூகக்குழுச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.இந்த தகவலை தேர்தல் துறை நேற்று(ஏப்ரல் 22) அறிக்கை வெளியிட்டது.

அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மொத்தம் 245 அரசியல் நன்கொடைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மலாய் சமூகத்தில் 42 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

இந்திய, மற்ற சிறுபான்மைச் சமூகத்தில் 37 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஏப்ரல் 19 ஆம் தேதி சனிக்கிழமை விண்ணப்பத்துக்கான கடைசி நாள்.

இதன் மூலம் வரும் பொதுத்தேர்தலில் 97 நாடாளுமன்ற இடங்களுக்கு 245 பேர் வரை போட்டியிடக்கூடும் என்பதைக் காட்டுகிறது.