அதிர்ச்சி…!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்…!!!

அதிர்ச்சி...!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்...!!!

தாய்லாந்தின் சியாங் மாயில் 3 வயது சிறுமியின் மூக்கிலிருந்த அட்டை பத்திரமாக அகற்றப்பட்டது.

உயிருடன் இருந்த அந்த அட்டையானது சிறுமியின் இரத்தத்தை உறிஞ்சி மூக்கிலேயே வாழ்ந்து வந்ததாக நக்கோன்பிங் மருத்துவமனை அதன் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

ஆற்றில் முகத்தைக் கழுவிய பிறகு, நான்கு நாட்களாக அந்தப் பெண்ணின் மூக்கிலிருந்து அடிக்கடி இரத்தம் வந்து கொண்டிருந்தது.

மருத்துவர்கள் அவரது மூக்கைப் பரிசோதித்தபோது ஒரு அட்டை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

3-சென்டிமீட்டர் நீளம் கொண்ட அந்த அட்டையை அகற்ற ஒரு சிறப்பு கருவி தேவைப்பட்டதாக மருத்துவமனை கூறியது.

முகம் கழுவிய ஆற்றில் இருந்த மாசுபட்ட தண்ணீரில் அந்த அட்டை இருந்திருக்கலாம் என்று மருத்துவமனை கூறியது.

தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.