ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!!

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!!

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரிகளால் பங்குகள் சரிந்தன.

கோவிட்-19 கொரோனா தொற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய STOXX 600 குறியீடு 5.8% குறைந்தது. ஒரே நாளில் பதிவான மிக மோசமான சரிவு இது.

ஜெர்மனியில் பங்குச்சந்தை 6.6% சரிவடைந்தது.

குறிப்பாக commerzbank இன் பங்கு 10.7% சரிந்தது. அதேபோல Deutsche bank பங்கு 10% குறைந்தது.

பாதுகாப்பு செலவினங்கள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த ஆயுத உற்பத்தியாளர்களின் பங்குகளும் சரிவடைந்தது.

Tankmaker Rheinmetall இன் பங்கு 23.7% வீழ்ச்சி அடைந்தது.

Hensoldt,Rheinmetall,Renk பங்குகள் 17 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை சரிந்தன.