சிங்கப்பூரின் பொருளாதாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிகள் பாதிக்குமா?

சிங்கப்பூரின் பொருளாதாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிகள் பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகளால் உலக அளவில் வர்த்தகம் பாதிப்படையலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த வரி விதிப்பு சிங்கப்பூரின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளை விட சிங்கப்பூர் கூடுதலாக பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருந்து பொருள், பகுதி மின்கடத்தி போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கு அமெரிக்கா வரிகளை விதித்தால் பாதிப்பு மேலும் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

பரவலான வரிகள் காரணமாக கப்பல் துறை, தளவாடத் துறை மற்றும் நிதித்துறைகளிலும் சிங்கப்பூர் தாக்கத்தை உணரக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்.