ஏசி வாங்க நினைப்பவரா? நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!!

ஏசி வாங்கும் போது டன் கணக்கு எவ்வளவில் வாங்க போகிறீர்கள் என்று கேட்பார்கள் அப்டி என்றால் என்ன என்பது ஒரு சிலருக்கு தெரியாது. எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும்? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
1) ஏசி வாங்கும் போது டன் என்ற அளவை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
2)எடை அதிகம் உள்ள பொருட்களை அளவிடும் போது கிலோவை தாண்டி டன் அடிப்படையில் கணக்கிடப்படும்.
பொதுவாக நாம் இருக்கும் வீட்டின் அளவைப் பொறுத்தே அந்த அளவு கணக்கிடுவார்கள் அதாவது 1 டன், 1.5 டன்,2 டன் என்ற அளவில் ஏசி வாங்குகிறோம்.
3) ஏசியில் டன் என்றால் என்ன என்று கேள்வி கேட்டால் ஒரு சிலருக்கு மட்டுமே அதற்கான பதில் தெரியும்.
அதில் இருக்கும் வாயுவை அளவிடுவதாக பலர் நினைக்கின்றனர்.
4) ஏசியை பொறுத்தவரை டன் என்பது ஒரு அறையில் இருந்து வெளியேற்றப்படும் வெப்பத்தின் அளவை குறிப்பது ஆகும்.
ஒரு மணி நேரத்தில் அறையில் இருந்து எந்த அளவு வெப்பத்தை வெளியேற்றுகிறதோ அதன் அடிப்படையில் தான் டன் அளவு கணக்கிடப்படுகிறது.
5)12000 BTU 1 டன்
என்று அழைக்கப்படுகிறது.
BTU என்பது பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்.
இது ஏசியின் குளிரூட்டும் திறனை அளவிடும் ஒரு அலகு ஆகும்.
1 டன் ஏசி 12,000 BTU. 1.5 டன் ஏசி 18,000 BTU. அதேபோல், 2 டன் ஏசி என்பது, 24,000 BTU ஆகும்.
6)கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக நாம் ஏசியை வாங்கி மாற்றுகிறோம் ஆனால் தவறான ஏசியை வாங்க கூடாது.
எனவே உங்கள் வீடுகளில் இருக்கும் அறைகளுக்கு ஏதுவாக ஏசியை தேர்வு செய்து வாங்க வேண்டும்.
150 சதுர அடி வரை உள்ள அறையில் ஒரு டன் ஏசி சரியாக வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.
அறையின் அகலம் மற்றும் மேல் கூரையின் உயரம், ஜன்னல் அமைப்பு அடிப்படையில் கணக்கிட்டு ஏசியை தேர்வு செய்ய வேண்டும்.
200 சதுர அடி அறைக்கு 1.5 டன் ஏசி தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
FOLLOW US ON MORE :
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==