சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !!

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !!

சாங்கி விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை விமானத்தில் எடுத்துச் செல்லும்படி மற்ற பயணிகளிடம் உதவி கேட்ட 9 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சாங்கி விமான நிலையத்தில் மற்ற பயணிகளை அணுகி தங்கம் மற்றும் கை தொலைபேசிகளை எடுத்துச் செல்ல உதவினால் உங்களுக்கு பணம் தருகிறோம் என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்ச் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை காவல்துறை, குடிநுழைவு, சோதனை சாவடிகள் ஆணையம், மனிதவள அமைச்சகம், சாங்கி விமான நிலைய குழுமம் ஆகியவை இணைந்து சோதனை நடத்தின.

அப்போது 30 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட 9 வெளிநாட்டினர் பிடிபட்டனர்.

அவர்கள் வேலை அனுமதி,சமூக வருகை அனுமதி (Social visit pass) மற்றும் s-pass அனுமதி போன்ற பாஸ்கள் மூலமாக சிங்கப்பூருக்கு வந்ததாக விசாரணையின் போது தெரியவந்தது.

அந்த நபர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அறிமுகம் இல்லாதவர்களின் சார்பாக விமானத்தில் பொருள்களை எடுத்துச் செல்வதை தவிர்க்குமாறு பயணிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.