5400 புதிய வீடுகள் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்……

5400 புதிய வீடுகள் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்......

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஜூலை மாதத்தில் சுமார் 5400 வீடுகள் தேவைக்கேற்ப கட்டி விற்பனைக்கு விடப்படும் வீடுகளை விற்பனைக்கு விடவுள்ளதாக தெரிவித்தது.

அந்த வீடுகள் புக்கிட் மேரா (Bukit Merah), புக்கிட் பாஞ்சாங் (Bukit Panjang), கிளமெண்டி (Clementi), செம்பவாங் (Sembawang), தெம்பனிஸ் (Tampines), தோ பாயோ (Toa Payoh), உட்லண்ட்ஸ் (Woodlands) ஆகிய இடங்களில் அமையும்.

வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, இந்த ஆண்டு மீதமுள்ள வீடுகளின் விற்பனை நடவடிக்கை இரண்டு முறை நடத்தப்படும்.

இந்த வருடம் முதல் 2027 ஆம் ஆண்டு வரை 50,000 க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்கு வரும்.

இதற்கிடையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கழக மறுவிற்பனை வீட்டு விலைக்குறியீடு 1.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக முன்னோடி மதிப்பீடு தெரிவித்தது.

கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் இது 2.6 சதவீதமாக இருந்தது.

2025 ஆம் ஆண்டுல் 8000 ஆக இருந்த MOP 2026 ஆம் ஆண்டில் சுமார் 13500 குடியிருப்புகளை எட்டும் என்றும், 2028 ஆம் ஆண்டில் இது 19500 குடியிருப்புகளாக உயரும் என்று தேசிய மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.