இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!!

இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!!

இத்தாலியின் Mount Faito பகுதியில் நேப்பல்ஸ் நகருக்கு அருகே மலைப்பகுதியில் கம்பிவண்டி ஒன்று விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மலையின் உச்சியை நெருங்கி கொண்டிருக்கும் போது கம்பி ஒன்று திடீரென துண்டிக்கப்பட்டு கம்பிவண்டி விழுந்தது.இதனை உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

மற்றுமொரு கம்பி வண்டி பள்ளத்தின் அருகே இருந்ததாகவும் அதில் இருந்த 16 பேரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்று தெரிவிக்கப்பட்டது.

சுமார் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.மேலும் அவர்கள் சம்பவம் நடந்த இடத்தை அடைவதற்கு மோசமான வானிலையால் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இத்தாலியப் பிரதமர் Giorgia Meloni விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.