மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!!

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!!

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூரின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் 270 போதைப்பொருள் பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றின் மொத்த எடை சுமார் 280 கிலோகிராம் என்று கூறப்படுகிறது.

சுமார் 4.05 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்களைப் பாதுகாக்க அந்த ஆண்கள் உதவியதாக நம்பப்படுகிறது.

அவர்கள் கடந்த ஆண்டு நவம்பரில் தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கேயே போதைப்பொருட்களை பதுக்கி வைத்தனர்.

போதைப்பொருட்களைப் பத்திரமாக வழங்குவதற்காக அந்தக் கும்பல் அவர்களுக்கு சுமார் 6,000 வெள்ளி வழங்க முன்வந்தது.

அந்த நபர்களைத் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் தாய்லாந்தில் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

சோதனைகளின் போது பிடிபடாமல் இருக்க, அந்தக் கும்பல் தேநீர் பைகளில் போதைப்பொருட்களை மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.