அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 அஞ்சல் Parcel Lockers நிறுவப்படும்!!
பிடாடாரி பார்க்,செங்காங் வெஸ்ட்,தெம்பனீஸ் நார்த் ஆகிய பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் 150 அஞ்சல் Parcel Lockers அமைக்கப்படவுள்ளன.
அவைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும்.
அவற்றை செயல்படுத்தும் பொறுப்பை Pick Network கட்டமைப்பானது ஏற்கும்.
பார்சல்களை பெறத் தவறியவர்கள் மீண்டும் டெலிவெரி செய்ய கோருவது அல்லது திருப்பி தரும் பார்சல்களை பெற்றுக்கொள்ள யாராவது வரும்வரை காத்திருக்கும் சிரமம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்பாளர்கள் ஒரு நாளில் எந்த நேரங்களிலும் தங்களின் அஞ்சல் பார்சல்களைப் பெற்று கொள்ள அல்லது திருப்பி தர முடியும்.
மேக்ஸ்வெல் ரோட்டில் உள்ள நகர மறுசீரமைப்பு ஆணையத்தில் நவம்பர் 15 ஆம் தேதி கண்காட்சி தொடங்கப்பட்டது.அதில் Parcel Lockers மாதிரி ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டது.
அந்த கண்காட்சியை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ துவங்கி வைத்தார்.
தகவல் தொடர்பு,ஊடக மேம்பாட்டு ஆணையம் Pick Network கட்டமைப்பை நடத்தி வருகிறது.
இது தற்போது சிங்கப்பூர் முழுவதும் 1010 அஞ்சல் Parcel Lockers மூலம் சேவைகளை வழங்குகிறது.
மளிகைப் பொருட்கள் டெலிவரிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
இது டான் டோக் செங் மருத்துவமனை ,உட்லண்ட்ஸ் ஹெல்த் ஆகியவற்றுடன் இணைந்து மருந்து விநியோகத்தை சோதனை முறையில் செய்து வருகிறது.இதன் மூலம் நோயாளிகள் அவரசமில்லாத மருந்துகளைப் பெறுவதை இது சாத்தியமாக்குகிறது.