பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!!

பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்...!!!

பூனை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இன்றளவும் பல வீடுகளில் பூனையை செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள் உண்டு.
அப்படி செல்லப் பிராணியாக வளர்க்கும் பூனையை பற்றிய இந்த 15 விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..??

💠 பூனைகள் சராசரியாக தனது வாழ்நாளில் 70 சதவீதம் தூங்கியே கழிக்கின்றன.

💠 பூனைகள் ஒரு உணவை மூன்று முறை ருசி பார்த்து நான்காவது முறையே அதை நம்பிக்கையுடன் உண்ணுமாம்.

💠 பூனைகளின் கர்ப்ப காலம் இரண்டு மாதங்கள் ஆகும்.

💠 பூனை தனது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும்.

💠 பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கம் கொண்டவை.

💠 மேலும் ஆண் பூனைகள் இடது கால் பழக்கம் கொண்டவை.


💠 பூனைகளுக்கு கழுத்துக்கும் தோலுக்கும் இடையில் காலர் எலும்புகள் எனப்படும் எலும்புகள் இல்லை.

💠 பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கப்படுகின்றன.

💠 பூனைகள் தனது உள்ளங்கால்கள் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.

💠 பூனைகளில் சிறுநீரானது இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டதாம்.


💠 பூனைகளால் இனிப்புப் பொருட்களை சுவைக்க முடியாதாம்.

💠 பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியுமாம். ஏனெனில் இதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் தன்மை கொண்டது.

💠 பூனைகளால் 33 வகையான பாலூட்டிகள் மற்றும் பறவைகள் அழிகின்றன.

💠 பூனை மிகவும் வேட்டையாடும் தன்மை கொண்ட 100 இனங்களில் ஒன்றாகும்.