தங்கக் கட்டியை விழுங்கிய 11 வயது சிறுவன்…!!!

தங்கக் கட்டியை விழுங்கிய 11 வயது சிறுவன்...!!!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் கவலை அடைந்த பெற்றோர்கள் தங்கள் மகனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.

மருத்துவர்கள் சிறுவனின் வயிற்றை
சோதனையிட்டதில் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆம் சிறுவனின் வயிற்றில் 100 கிராம் தங்கக் கட்டி இருந்துள்ளது.

மகனின் வயிற்று வலிக்கு தங்கம் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தங்கக் கட்டியை விழுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மருத்துவர்கள் சிறுவனின் உடலில் இருந்து கட்டி இயற்கையாகவே வெளியேறும் வரை மருத்துவர்கள் காத்திருந்தனர்.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகும், தங்கக் கட்டி கொஞ்சம் கூட நகரவில்லை.

சிறுவனின் குடலில் அடைப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சி, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

சிறுவனின் உடலில் இருந்து தங்கக் கட்டி தற்போது பத்திரமாக அகற்றப்பட்டுள்ளது.