செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!!

செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!!

செம்பவாங் பகுதியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளுக்கான கூடுதலாக 1000 பாலர் பள்ளி இடங்கள் தயாராகவிருக்கிறது.

ஈஸ்ட் கான்பரா(East Canberra) பகுதியில் உள்ள இளம் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அது உதவும்.

அந்த பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான திரு. ஓங் யீ காங் இது குறித்த விவரங்களை கூறினார்.

மேலும் அங்கு புதிய தொடக்கப் பள்ளியைக் கட்டுவதற்கான திட்டம் உள்ளது என்று அவர் கூறினார்.

இளம் பெற்றோர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் புதிய தொடக்கப் பள்ளி மற்றும் பாலர் பள்ளி இடங்கள் ஆகியவை குறித்து கல்வி அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

2029 ஆம் ஆண்டுக்குள் தொடக்கப் பள்ளியைக் கட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Sheng Siong என்ற இடத்திற்கு எதிரே தொடக்கப் பள்ளி கட்டப்படும் என்று அவர் கூறினார்.